fbpx

தையல் கடைக்கு சென்ற சிறுமியை தட்டித்தூக்கிய மர்ம கும்பல்..!! 5 நாட்களாக மாறி மாறி கூட்டு பலாத்காரம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி 17 வயது சிறுமி ஒருவர் அருகே உள்ள தையல் கரை தையல்காரரிடம் துணிகளை தைக்க எடுத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றம் சாட்டப்பட்டவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கை தீவிரமாக கவனத்தில் கொண்டு மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் சவுத்ரி சிறுமியை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் தொழில்நுட்ப கேமரா உதவியுடன் தீவிரமாக தேடி வந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிபூரில் சிறுமி இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டுள்ளனர். ஆனால் சிறுமி மயக்க நிலையில் இருந்ததாகவும் போதை பொருள் கொடுத்து சிறுமி 5 நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிறுமி போலீசாரிடம் கூறுகையில், 3 பேரும் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போதைப்பொருள் கொடுத்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

நாளை மறுநாள் கரையை கடக்கிறது பிபர்ஜாய் புயல்…..! கொந்தளிக்கும் குஜராத் கடல் பகுதி….!

Tue Jun 13 , 2023
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே பிபர்ஜாய் புயல் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது, இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களான போர்பந்தர், தேவபூமி, துவாரகா, ஜாம்நகர், ஜுனாகர், மோர்பி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் துவாரகாவின் பலத்த காற்று வீசியதுடன் மட்டுமல்லாமல் கடல் கொந்தளிப்புடன் […]

You May Like