fbpx

பேய் கிராமம்..! ஒரேயொரு பெண்ணுக்காக ஒரே இரவில் ஊரில் இருந்து மாயமான மக்கள்!… என்ன நடந்தது?… இன்றுவரை தீராத மர்மம்!

ராஜஸ்தானில் பேய் கிராமம் என்று அழைக்கப்படும் குல்தாரா கிராமத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும், ஒரே இரவில் இந்த கிராமத்தை விட்டு மாயமான மக்கள். இன்றுவரை தீராத மர்மமாகவே உள்ளது.

பேய் கிராமம் என்று அழைக்கப்படும் இந்த கிராமத்திற்கு இரவில் மட்டுமல்ல, பகலும் செல்லவும் மக்கள் பயப்படுகிறார்கள். இந்த கிராமத்தின் பெயர் குல்தாரா. ஜெய்சல்மேருக்கு மேற்கே 17 கி.மீ தொலைவில் இந்த கிராமம் உள்ளது. இங்கு உடைந்த வீடுகள் மற்றும் சுவர்களை பார்க்க முடியும் ஆனால் தற்போது யாரும் இங்கு வசிக்கவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு குல்தாரா செழிப்பான கிராமமாக இருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும், ஒரே இரவில் இந்த கிராமத்தை விட்டு வெளியேறினர் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு சரியாக என்ன நடந்தது?

வறட்சி மற்றும் ஜெய்சால்மரின் பிரதம மந்திரி சலீம் சிங்கின் அதிகப்படியான வரி போன்ற காரணங்களுக்காக இந்த கிராமம் காலப்போக்கில் கைவிடப்பட்டதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புராணக்கதைகள் சொல்ல வேறு கதை உள்ளது. ஜலிம் (கொடூரமான) சிங் என்று அடிக்கடி அழைக்கப்படும் சலீம் சிங், ஜெய்சால்மர் மன்னருக்கு உயர்வான முதன்மை மந்திரியாக இருந்தாராம். அவர் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார், 300 ஆண்டுகளுக்கும் முன்பு குல்தாரா கிராமத்தில், பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்தனர்.

அந்த நேரத்தில் மிகவும் அழகாக இருந்த கிராமத் தலைவரின் மகள் மீது சலீம் சிங்கின் கவனம் மீது திரும்பி உள்ளது. அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய விரும்பினர். யாரேனும் அதை தடுக்க முயன்றால், அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று கிராம மக்களிடம் சலீம் சிங் கூறியுள்ளார். இதனால் அச்சம் காரணமாக அந்த கிராமம் மற்றும் சுற்றுவட்டார 85 கிராமங்கள் கூட்டத்தை கூட்டி திடீரென ஒரே இரவில் கிராமத்தை விட்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இப்போது கிராமத்தை காலி செய்யும் போது, ​​எல்லோரும் தங்கள் உடைமைகளுடன் கிளம்பியிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் அது நடக்கவில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் உடமைகள், அன்றாடப் பொருட்கள், உணவு, பானங்களைக்கூட அங்கேயே வைத்துவிட்டு அவசரமாக கிராமத்தை விட்டு வெளியேறினர். கிராமத்தை விட்டு வெளியேறும் போது, ​​அந்த கிராமத்தில் வேறு யாரும் அங்கு வாழ முடியாது என்று சபித்துவிட்டு சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது. தீர்க்கப்படாத மர்மம் என்னவென்றால், பாலிவால் பிராமணர்கள் தங்கள் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பிறகு மாயமாகிவிட்டார்களாம். அவர்கள் காற்றில் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அவர்கள் அதன் பிறகு எங்கே குடியேறினார்கள் என்பதைக் கண்டறிய பல முயற்சிகள் நடந்தன. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அவர்கள் எங்கு போனார்கள் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்த கிராமத்தில் இன்று வரை யாரும் வசிக்கவில்லை. பல தசாப்தங்களாக இந்த கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது. பகல் அல்லது இரவு நேரங்களில் இங்கு செல்ல அச்சப்படுவதாக மக்கள் கூறியுள்ளனர். மேலும் சலீம் சிங் கிராமத்தின் மீது இவ்வளவு வரி விதித்ததால், மக்கள் அதைச் செலுத்த முடியாமல் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர் என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த கிராமம் தற்போது இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Kokila

Next Post

தூக்கத்தில் ஏற்படும் மாரடைப்பை தடுப்பது எப்படி?… இதய நோய் மருத்துவர் விளக்கம்!

Sun Aug 13 , 2023
திடீர் மாரடைப்பு பல்வேறு காரணிகளால் ஏற்படலாம்,” என்கிறார் டெல்லியின் பிரபல இதய நோய் மருத்துவர் டாக்டர் நிஷித் சந்திரா. தூக்கத்தின் போது திடீரென மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்கள் குறித்தும் அவர் விளக்கினார். லாங் க்யூடி சிண்ட்ரோம், ப்ருகாடா சிண்ட்ரோம் மற்றும் ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி போன்ற சில மரபணு நிலைகள் திடீர் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம். பிறவி இதயக் குறைபாடுகள் அல்லது பிற கட்டமைப்புக் கோளாறுகள் இதயத்தின் அமைப்பை […]

You May Like