fbpx

பெண் நிர்வாகியின் மார்பகத்தில் கை வைத்த மர்ம நபர்..!! காங்கிரஸ் பிரச்சார மேடையில் அதிர்ச்சி..!! வைரலாகும் வீடியோ..!!

ஹரியானாவில் தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தீபேந்தர் சிங் ஹூடா பங்கேற்ற பிரச்சார நிகழ்ச்சியில் பெண் நிர்வாகி ஒருவரும் பங்கேற்கிறார். மேடையின் முன்புறத்தில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, ​​பின்னால் நின்றிருந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், அந்த பெண்ணின் மார்பகத்தை தொட்டார். இதைப் பார்த்து, அருகில் இருந்தவர் அந்த நபரின் கையைத் தட்டி விடுகிறார். மேலும், பெண் நிர்வாகி அதை பெரிதாக அப்போது எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகியிடம் காங்கிரஸ் எம்பி குமாரி செல்சா பேசியுள்ளார். எம்.பி. குமாரி செல்சா கூறுகையில், அந்த பெண் நிர்வாகியிடம் இதுகுறித்து பேசினேன். தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்தினார். எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேபோல், ஹரியானா பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி கூறுகையில், “இது அவர்களின் (காங்கிரஸ்) கலாச்சாரம்” என்று விமர்சித்தார். அது அவர்களின் டிஎன்ஏவில் உள்ளது. இது தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் சமூகத்தின் ஒருங்கிணைந்த அங்கம். பெண்களுக்கு எதிரான இந்த செயலை எனது அரசு பொறுத்துக் கொள்ளாது. இதுவரை பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் யார்? பின்னணி என்ன? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. மேலும் அந்த நபர் மேடையின் பின்புறம் நின்றிருந்ததால் அந்த நபரின் முகம் காணொளியில் தெரியவில்லை.

Read More : வாகனங்களின் டயர்கள் மட்டும் ஏன் கருப்பாக இருக்கிறது தெரியுமா..? அடடே இவ்வளவு விஷயம் இருக்கா..?

English Summary

A Congress worker standing behind touched the woman’s breast. Seeing this, the bystander taps the man’s hand.

Chella

Next Post

உஷார்!. சீனப்பொருட்களை பயன்படுத்துகிறீர்களா?. நம் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும் அதிர்ச்சி!

Sun Oct 6 , 2024
Be careful! Do you use Chinese products? The shock of monitoring our every move!

You May Like