fbpx

பிரபல நடிகையுடன் நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்..!! இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!!

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்துவிட்ட பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் பிரபல நடிகைக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக வெளியான தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021இல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

சமந்தாவை பிரிந்த பின் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபியா துலிபாலா  உடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக இருந்த புகைப்படம் இணையத்தில் கசிந்து பேசு பொருளாகின. இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில் இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், இருவீட்டார் மட்டும் கலந்து கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த நிச்சயதார்த்தம் குறித்து சோபியா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின் இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள நிலையில் நடிகர் நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; NEET PG 2024 | முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!!

English Summary

Na Digar Naga Chaitanya and Sobitha Thulipala are getting engaged today, reports are doing the rounds.

Next Post

Metro | தொழில்நுட்பக் கோளாறு..!! சென்னை மெட்ரோ ரயில் தாமதமாக இயக்கம்..!! பயணிகள் அவதி..!!

Thu Aug 8 , 2024
It has been announced that metro trains will run late between Wimco and Vannarpet due to a technical glitch.

You May Like