fbpx

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியுடன் இணைகிறதா நாம் தமிழர்..? சீமான் பரபரப்பு பதில்..!!

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் திட்டமிட்டே சோதனை நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சோதனைகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்கட்சிகளை அச்சுறுத்துகின்றனர்.

சனாதனம் என்றால் என்ன என்கின்ற வரையறையை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இங்கு ஆதிக்க சாதி என்றும் ஒருவருமில்லை, அடிமை சாதி என்றும் ஒருவருமில்லை. நான் உயர்ந்த சாதி என எண்ணுபவர்கள், நமக்கு கீழே தாழ்ந்த சாதி யாருமில்லை என நினைத்தால் பிரச்சனை வராது.

நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார். அவர் படம் நடிப்பதை நிறுத்திவிட்டு கட்சி தொடங்குவார். அரசியலுக்கு வந்த பிறகு அவருடன் கூட்டணி குறித்து பேசி முடிவு சொல்லலாம். தற்போது நான் தனித்து போட்டியிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

கமல் பலவந்தமா லிப்லாக் அடிச்சது மட்டும் கரெக்டா..? கழுவி ஊற்றிய யுகேந்திரனின் மனைவி..!!

Mon Nov 6 , 2023
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் நுழைந்துள்ளனர். இந்நிலையில், நிகழ்ச்சியின் துவக்கம் முதலே போட்டியாளர் பிரதீப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சக […]

You May Like