இன்சூரன்ஸ் இல்லாத AUDI A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்து தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை தெற்கு மக்களவைத் தொகுதி என்பது சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் ஒன்றாகும். விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகியவை இந்த தொகுதிக்கு கீழ் வரும். இந்த முறை தென் சென்னை தொகுதி ஸ்டார் வேட்பாளர் தொகுதி ஆகும். மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜே. ஜெயவர்த்தன் மீண்டும் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுபோக, தமிழிசை சௌந்தரராஜன் இதே தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜக சார்பாக இவர் களமிறங்குகிறார். ஏற்கனவே இது ஸ்டார் தொகுதியாக உள்ள நிலையில், இங்கே களமிறங்கும் தமிழ்செல்வி எனப்படும் நாம் தமிழர் வேட்பாளரும் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன்படி, அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்சூரன்ஸ் இல்லாத AUDI A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்து தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரின் காருக்கான இன்சூரன்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதமே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
Read More : ஓடிடியில் வெளியாகிறது “மஞ்சுமெல் பாய்ஸ்”..!! தேதியை அறிவித்தது டிஸ்னி + ஹாட்ஸ்டார்..!!