fbpx

நடிகையிடம் அத்துமீறிய ரசிகர் – ராஷ்மிகா செய்த செயல்

மும்பை விமான நிலையத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி செயல்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படம் மூலம் ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். அதனை தொடர்ந்து, விஜய்யின் வாரிசு படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இருப்பினும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அண்மையில் ராஷ்மிகா நடிப்பில் இந்தியில் வெளியான அனிமல் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள் பிரண்ட் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், மும்பை விமான நிலையத்தில் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது, ரசிகர்கள் செல்பி எடுக்க அவரை சூழ்ந்து கொண்டனர். அதில், ஒரு ரசிகர் ராஷ்மிகாவின் கையை தொட்டு செல்பி எடுக்க முயன்றார். இதனால் ராஷ்மிகா அசவுகரியமாக உணர்ந்ததாக்க தெரிகிறது.

இருந்தபோதிலும், அந்த சூழ்நிலையை அமைதியாகவும், பணிவாகவும் ராஷ்மிகா கையாண்டதால், அவரை பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://x.com/BibleeRashmika/status/1811622911603544122?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1811622911603544122%7Ctwgr%5Eeda3e40d271360784a6046870d531387a6225007%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fcinema%2Fcinemanews%2Frashmika-mandanna-gets-mobbed-by-fans-handles-it-with-grace-1113861

read more… அதிர்ச்சி..!! அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!!

English Summary

rasmika manadonna arrives mumbai aripport – fans touch her… video goes viral

Next Post

உலகின் மிக ஆபத்தான விஷம் இதுதான்!. பாக்டீரியாவில் இருந்து பெறப்படுகிறது!. மரணம் நிச்சயம்!.

Sun Jul 14 , 2024
This is the most dangerous poison in the world! Derived from bacteria!. Death is certain!

You May Like