fbpx

“என் கனவு காரை வாங்கிட்டேன்” நாக சைதன்யாவின் புதிய Porsche 911 GT3 RS கார்..! விலை என்ன தெரியுமா?

பிரபல நடிகர் நாக சைதன்யா ஏற்கனவே பல சொகுசு கார்களை வைத்துள்ள நிலையில், இப்பொது புதிய சூப்பர் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

பிரபல நடிகர் நாகார்ஜுனா அவர்களின் மகன் தான் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நாக சைதன்யா. ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், தனது இளமை பருவத்தை பெரிதளவும் சென்னையில் கழித்தவர். 2009ம் ஆண்டு வெளியான ஜோஷ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நாக சைதன்யா.

சமீபத்தில், பிரபல தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கார்கள் மீது தனக்குள்ள ஈடுபாடு குறித்தும் சென்னையில் தான் தனக்கு கார்கள் மீதான ஒரு ஈர்ப்பு துவங்கியது என்றும் கூறி மனம் திறந்து பேசினார். கார்கள் தான் தனக்கு முதல் காதலி என்று கூறிய நாக சைதன்யா சென்னையில் இருந்து பொழுது “ஃபியட்” நிறுவனத்தின் “பேலியோ” காரைத் தான் முதலில் ஓட்டி பழகியதாக கூறினார்.

மேலும், எனது கனவு கார் ஒன்றை விரைவில் நான் வாங்குகிறேன் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று கூறியிருந்தார். அண்மையில் ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் 110 என்கின்ற காரை வாங்கிய நாக சைதன்யா ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்களை தன்வசம் வைத்திருக்கிறார்.

அதன்படி கடந்த மே மாதம் 17ம் தேதி தனது கனவு காரான Porsche 911 GT3 RSஐ வாங்கியுள்ளார். இந்திய சந்தையில் அதன் மதிப்பு சுமார் 3.5 கோடி ரூபாயாக இருக்கிறது. சென்னையில் உள்ள Porsche கார் ஷோரூமில் தான் அவர் அந்த காரை தற்பொழுது வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒரு பதிவை வெளியிட்டு, நாக சைதன்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 

இனி இன்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போனில் பணம் அனுப்பலாம்.. எப்படினு தெரிஞ்சுக்கோங்க!

Next Post

PM-WANI வைஃபை திட்டம்!! ரூ.99க்கு 100GB டேட்டாவை வழங்குகிறது!! முழுவிவரம் இதோ!!

Wed May 22 , 2024
பிரதமர் மோடியின் வைஃபை திட்டம் 9 ரூபாய் முதல் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களைப் பெற மக்களுக்கு உதவுகிறது. இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் விலையுயர்ந்த திட்டங்களை பெற முடியாதவர்களுக்கு புதிய இணைய சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2020ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த புதிய திட்டம், 9 ரூபாய் முதல் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களைப் பெற மக்களுக்கு உதவுகிறது. PM-WANI வைஃபை திட்டம்: […]

You May Like