fbpx

நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு…..!

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிந்து வந்த ஸ்ரேயா வி.சிங் வேளாண் துறை கூடலூர் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் பணியில் இருந்த உமா, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்து கொண்டிருக்கிறார் இதனை தொடர்ந்து, அவர் இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் உமா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது தமிழ்நாடு சுகாதாரத் துறையில் இருந்து முதல் ஐஏஎஸ் ஆட்சி தலைவராக பதவி ஏற்றுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நான் கடந்த 1995 ஆம் ஆண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினேன் இதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனராக பதவி வகித்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு தேசிய நலவாரிய குழும இணை இயக்குனராக பொறுப்பேற்றேன். 2019 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பதவி வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு திருவள்ளூரில் பயிற்சி ஆட்சியாளராகவும், பழனியில் சார் ஆட்சியராகவும், ராணிப்பேட்டையில் துணை ஆட்சி தலைவராகவும் பணிபுரிந்தேன் என்று கூறியிருக்கிறார்.

சுகாதாரத்துறை திட்ட இயக்குனராகவும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், அவசர ஊர்தி சேவை உலக வங்கி, ஜப்பான் வங்கியில் நிதி உதவி பெறுவதற்கான திட்ட இயக்குனராகவும் பணிபுரிந்தேன். அதன் பின்னர், தற்போது நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன் என்று கூறியுள்ளார்.

அதே போன்று நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் தேவைப்படும் சுகாதார பணிகள் செய்து கொடுக்கப்படும் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலமாகவும் சுகாதாரத் துறை மூலமாகவும் அவர்களுடைய மேம்பாட்டுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உமா தெரிவித்திருக்கிறார்.

Next Post

BreakingNews : இ.பி.எஸ் தரப்பிடம் அதிமுக அலுவலக ஆவணங்கள் ஒப்படைப்பு…..!

Mon May 22 , 2023
அதிமுக அலுவலக மோதலின் போது பன்னீர்செல்வம் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்படும் தற்போது ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவணங்களை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் பெற்றுக் கொண்டார்.
எம்ஜிஆர் சிலையிடம் ராஜினாமா கடிதம்..!! கதறி கதறி அழுத அதிமுக பிரமுகர்..!! என்ன காரணம்..?

You May Like