fbpx

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவன்…..! கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து துடிக்க துடிக்க கொலை செய்த கொடூரம்….!

நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(33). தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு கீர்த்தனா (30) என்ற மனைவியும், ஜனஸ்ரீ (13), கவின் ஸ்ரீ (7) என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள் இந்த நிலையில் கீர்த்தனாவுக்கும், சின்ன வரகூர் கோம்பையை சேர்ந்த கதிரேசன்( 27) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மோகன் ராஜை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டினர். அதன் அடிப்படையில், கடந்த 6-ம் தேதி மோகன்ராஜ் வீட்டில் இரவு வேலை முடிந்து அந்த பின்னர் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார் கீர்த்தனா.

மயங்கிய நிலையில், கணவர் உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கள்ளக் காதலன் கதிரேசன், கீர்த்தனாவுடன் இணைந்து, மோகன்ராஜ் வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து வயர் மூலமாக மின்சாரத்தை எடுத்து வந்து அதனை மோகன்ராஜ் உடலில் பாய்ச்சி கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்கள். அதன் பிறகு மோகன்ராஜ் தற்செயலாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்து கீர்த்தனா நாடகமாடி இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மனைவி கீர்த்தனாவும், கதிரேசனும் இணைந்து தான் மோகன்ராஜை கொலை செய்தனர் என்பது தெரிய வந்தது. ஆகவே மோகன்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, மர்ம சாவு என்பதை மாற்றி கொலை வழக்காக காவல்துறையினர் பதிவு செய்து கீர்த்தனா மற்றும் கதிரேசனை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

Next Post

போராடி கணவரை ஜாமினில் அழைத்து வந்த மனைவி…..! வெளியே வந்த 15 நாட்களில் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்…..!

Tue Jun 13 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியின் மேற்கு பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் கிருஷ்ண பால் என்ற இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்களுடைய குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டனர். அதோடு பூஜா ஒரு பியூட்டி பார்லரை நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கிருஷ்ணபால் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். […]

You May Like