fbpx

மின் இணைப்பில் பெயர் மாற்றம்!… சிறப்பு முகாம் செப்.25ம் தேதிவரை நீட்டிப்பு!

வீட்டு மற்றும் பொது மின் இணைப்பு சிறப்பு பெயர் மாற்றம் முகாம் செப்.25 வரை நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய ஏதுவாக கடந்த ஜூலை 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பெயர் மாற்றம் முகாம் செப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் 2 லட்சம் பேர் பெயர் மாற்றம் TANGEDCO-வில் செய்யப்பட்டுள்ளன. TANGEDCO-வில் பெயர் மாற்றம் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 24ம் தேதி ஆகும் அறிவிக்கப்பட்ட நிலையில் முகாமை செப்.25 வரை நீட்டித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென ‘சிறப்பு பெயர் மாற்றம் முகாம்’ ஒன்றினை கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர்மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது.

இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலுக வேலை நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை செயல்படும். வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, கீழ்கண்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான 726 ரூபாய் (ரூ 615+GST ரூ 111) செலுத்தி இந்த “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” மூலம் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர் கீழே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

BANK-HOLIDAY: செப்டம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது..! விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல்…

Sat Aug 26 , 2023
இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் வங்கிப் பணி மற்றும் விடுமுறை நாட்களையும் அறிவித்து வருகிறது. அதன் படி செப்டம்பர் மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் வங்கிக் கிளைக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், எந்தத் தொந்தரவும் […]

You May Like