fbpx

விஜய் மகன் படத்தில் நானா ?.. ‘ஆமா மீட்டிங் நடந்தது உண்மைதான்’ – கவின் கொடுத்த ட்விஸ்ட்!

நடிகர் விஜய்யின் மகள் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின் நடிக்க இருப்பதாக வெளியாக தகவல் குறித்து நடிகர் கவின் விளக்கம் அளித்துள்ளார்.

லண்டனில் சினிமா தொடர்பான படிப்பை நிறைவு செய்துள்ள ஜேசன் சஞ்சய் தற்போது தனது முதல் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நாயகனாக கவின் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கவின், ” “ அந்தப்படம் தொடர்பான சந்திப்பு நடந்தது உண்மைதான். அந்த சந்திப்பு நட்பு ரீதியாக, மிகவும் சாதரணமாக நடந்தது. அவர்களிடம் நான் எனக்கு இருக்கும் அடுத்தடுத்த வேலைகள் குறித்து சொன்னேன். அவர்கள் கலந்து யோசித்து விட்டு சொல்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் எந்த தகவலும் வரவில்லை.

சஞ்சயை பொருத்தவரை, அவர் விஜய் சாரை விட சாதரணமாக இருப்பவர். எனக்கு அவரை பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. அவர்களை பார்க்கும் போது, அவர்களே அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எங்கே.. என்று தோன்றும். நாம், இன்னும் இன்னும் பணிவாக வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.” என்று பேசினார்.

இதையடுத்து ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கவின், ஹரீஷ் கல்யாண், அதர்வா முரளி ஆகியோரின் பெயர் அடிபட்டது. சிறிது காலம் கழித்து இவர்கள் மூவரும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இப்போது அந்தப்படத்தில் நடிகர் கவின் கமிட் ஆகவில்லை என்பது தெரிந்து விட்டது.

Next Post

2 கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்..!! உங்களுக்கும் இப்படி வருதா..? என்ன காரணம்..?

Fri May 3 , 2024
ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இரண்டு கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதத்தில் சுமார் 2 கோடி வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியின் பாதுகாப்பு, பயனர்களின் பாதுகாப்பு, செயலியின் நம்பகத்தன்மை, தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் […]

You May Like