fbpx

Nanguneri | நாங்குநேரி கொடூர சம்பவத்தை நேரில் பார்த்தவர் மரணம்..!! ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு..!!

நாங்குநேரியில் நிகழ்ந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த அம்பிகா என்பவரது மகன் சின்னதுரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9ஆம் தேதி அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர் கிருஷ்ணன், த/பெ.சுடலைமுத்து (வயது 59) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.

உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரெடி..! 14-ம் தேதி முதல் விடைத்தாள்...! 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

Sun Aug 13 , 2023
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்த கல்வியாண்டு நடைபெற்ற 11-ம் வகுப்பு துணைத் தேர்வர்கள் தங்கள் விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் 14-ம் தேதி பிற்பகல் முதல் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள்கள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II அல்லது மறு […]

You May Like