நாங்குநேரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட 6 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
நாங்குநேரி காவல் நிலைய சரகம் நாங்குநேரியில் உள்ள மாணவர்களுக்கு இடையே பள்ளி வளாகத்தில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. பின் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவனின் தாய் அதே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தன் மகனிடம் தகராறில் ஈடுபடுவதாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு இளஞ்சிறார்கள் சேர்ந்து 09.08.2023-ம் தேதி அந்த மாணவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி அருவாளால் தாக்கி ரத்த காயம் ஏற்பட்டுத்தியும், தடுக்க வந்த அவருடைய தங்கையையும் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
பின் மாணவனும், அவருடைய தங்கையும் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேற்படி சம்பவம் குறித்து நாங்குநேரி காவல் நிலையத்தில் காயப்பட்ட மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இக்குற்றச் செயலில் ஈடுபட்ட 6 இளஞ்சிறார்களை கையகப்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்ட்டனர். மேலும் மாணவ மாணவியர்களிடையே பள்ளி கல்லூரிகளில் காவல்துறை, கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.