fbpx

Drugs: நாளை நேரில் ஆஜராக வேண்டும்…! இயக்குநர் அமீருக்கு NCB சம்மன்…!

நாளை நேரில் ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனப் பொருட்கள், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதற்கு மூலையாக செயல்பட்ட திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை கடந்த 9ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபிறகு, தமிழகத்தில் அமீர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக NCB அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெண்களுக்கு சூப்பர் திட்டம்...! தொழில் செய்ய ரூ.3 லட்சம் வரை வட்டி இல்லா கடன்...! எப்படி பெறுவது...?

Mon Apr 1 , 2024
பொருளாதாரத்தில் பின்தங்கிய வியாபாரிகளுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு பணியாளர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கிராமத்தில் இருக்கும் பெண் வியாபாரிகள் பொதுத்துறை வங்கிகளில் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறலாம். இத்திட்டத்தில் கடன் பெறும் பெண்களுக்கு சிறப்புத் தொழில் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். […]

You May Like