அமெரிக்காவில் இன்று ஏவப்பட இருந்த ஆர்டெமிஸ் ராக்கெட் எரிபொருள் கசிவால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆர்டெமிஸ் விண்கலம் இன்று இரவு 11 மணி அளவில் ஏவப்பட இருந்தது. இந்நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்டெமிஸ் விண்கலம் கடந்த 29ம் தேதி அனுப்பபபட இருந்தது. எரிபொருள் நிரப்பும் போது கசிவு ஏற்பட்டதால் தள்ளி வைக்கப்பட்டது. இன்று இரவு ஏவப்பட தயார் நிலையில் இருந்த விண்கலத்தில் மீண்டும எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
5 நாட்களில் இரண்டாவது முறையாக ராக்கெட் அனுப்பப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நாசா விஞ்ஞானிகள் அதிருப்தியில் உள்ளனர். மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சோதனை செய்யும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகின்றது. 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும்மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. அதில் சோதனைமுறையாக இந்த முறை மனிதர்களைப் போல பொம்மைகளை அனுப்புகின்றது. அடுத்தடுத்த சோதனைகளில் படிப்படியாக மனிதர்களை அனுப்பி நிலவில் கால் பதிக்கவைப்பதுதான் திட்டம். 1972ம் ஆண்டு அப்போலோ என்ற திட்டம் மூலம் முதல் முறையாக மனிதர்களை அனுப்பி சாதனை செய்தது அமெரிக்கா. அதையடுத்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. எனவே இந்த தடங்கள் சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது