fbpx

”செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த ஏலியனை அழித்த நாசா”..!! அறிவியலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

50 ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில் ஏலியன் இருந்ததாகவும், அதனை நாசா அழித்துவிட்டதாகவும் அறிவியலாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

டிர்க் ஷூல்ஸ்-மகுச் (Dirk Schulze-Makuch) என்பது அவர் பெயர். பெர்லினில் உள்ள டெக்னிகல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர், 1970-களில் செவ்வாயின் மண்ணில் தண்ணீர் சேர்த்து மேற்கொண்ட சோதனை அங்கிருந்த உயிரை அழித்திருக்கும் என்கிறார். 1970ஆம் ஆண்டு வைக்கிங் என்ற விண்வெளித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, செவ்வாய் கிரகத்திற்கு சென்ற நாசாவின் லேண்டர்கள் 3 உயிரியல் பரிசோதனைகளை மேற்கொண்டன.

செவ்வாய் கிரக மண்ணில் ஊட்டச்சத்து கரைசலைக் கலந்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியாகும் அளவை அளவிட்டு நுண்ணுயிர் இருப்பதை கண்டறிவது ஒரு முக்கிய சோதனையாக பார்க்கப்பட்டது. ஊட்டச்சத்து கரைசலை நுண்ணுயிர்கள் உட்கொண்டால், கதிரியக்க கார்பன்களை வெளியிடும். அதைக் கொண்டு நுண்ணுயிரிகளின் இருப்பை அறியலாம் என்பது திட்டம்.

இந்த நீர் மிகவும் திரவமாக இருந்திருக்கலாம் என்று டிர்க் ஷூல்ஸ்-மகுச் கூறியிருக்கிறார். அப்படி திரவமாக இருந்தால் அங்குள்ள உயிரும் அழிந்திருக்கும். ஆனால், நாசாவின் வைக்கிங் 1 வைக்கிங் 2 லேண்டர்கள் பாசிட்டிவான முடிவுகளையே வழங்கின. சோதனையில், செவ்வாய்யின் மண் மாதிரியிலிருந்து 14CO2 மூலக்கூறு வெளியானதாக கூறுகின்றன. நாசாவின் இந்த முடிவும் விவாதத்துக்கு உட்பட்டதே. சில அறிவியலாளர்கள் செவ்வாய்இல் இருக்கும் கரிம சேர்மங்களின் ஆக்சிஜனேற்றம் காரணமாக 14CO2 மூலக்கூறு வெளியாகியிருக்கலாம் என்று கூறினர்.

வைக்கிங் திட்டம் நிறைவேற்றப்பட்ட 1970களின் விஞ்ஞானிகளுக்கு செவ்வாயின் சுற்றுசூழல் குறித்து குறைவான புரிதலே இருந்தது என்கிறார் முகுச். “பூமி நீர் கிரகமாக இருப்பதால், தண்ணீரை சேர்த்து உயிர் இருப்பதை அறிவது நல்ல விஷயம் தான். ஆனால், சிலி போன்ற உலகின் வெப்பமான பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் போது உயிர்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.” என்கிறார்.

இந்நிலையில், செவ்வாயில் உயிர்கள் இருக்கிறதா என்பதை ஆராய பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முகுச் கோரிக்கையை வைத்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பிருக்கும் தெற்கு ஹைலேண்ட்ஸ் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Chella

Next Post

கரூரில் ஏலியன்கள்..!! அங்கும் இங்கும் உலா வந்த 2 மர்ம ஒளிகள்..!! பொதுமக்கள் பீதி..!! நடந்தது என்ன..?

Sun Sep 3 , 2023
கரூர் மாவட்டத்தில் வானில் இரு மர்ம ஒளிகள் வட்டமடித்த நிலையில், ஏலியன்கள் பூமிக்கு வந்துவிட்டார்களா? என பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் உள்ள ரோவர், லேண்டர் நிலவில் தரையிறங்கியுள்ளது. ரோவர் நிலவில் தாதுக்கள், மண், நீர் உள்ளிட்டவை இருக்கின்றனவா என ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில், முதற்கட்டமாக சல்ஃபர், மாங்கனீஸ், ஆக்ஸிஜன், சிலிக்கான் உள்ளிட்டவை இருக்கின்றன. […]

You May Like