புளூட்டோவின் (PLUTO) வண்ணமயமான படத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வெளியிட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் மிகவும் தொலைவில் உள்ளது புளூட்டோ. கிரகம் என்ற அந்தஸ்தை புளுட்டோ இழந்தாலும் அது குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நாசா தனது நியூ ஹாரிஜான் தொலைநோக்கி எடுத்த புளூட்டோவின் படங்களை வெளியிட்டு வருவதால், அதுகுறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போது நாசா வெளியிடப்பட்டுள்ள புளூட்டோவின் வண்ணமயமான படமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஏவப்பட்ட நியூ ஹொரைசன்ஸ் விண்வெளி ஆய்வு கண்காணிப்பு விண்கலம் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. புளூட்டோவின் மலைகள், பள்ளத்தாக்குகள், மென்மையான பனிக்கட்டி சமவெளி, அதிக பள்ளங்கள் மற்றும் அதீத காற்றுடன் கூடிய குன்றுகள் என தனித்துவமான பகுதிகளுக்கு இடையில் உள்ள பல நுட்பமான வண்ண வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டது என நாசா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளது.