fbpx

‘நிலவில் இரயில் விடும் நாசா’ அமெரிக்கா போடும் மாஸ்டர்பிளான்!

நாசா மையம் உலக நாடுகள் வியப்படையும் வகையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நிலாவில் ரயில் இயக்கத்தையும் அதரக்கான நிறுத்ததையும் உருவாக்கவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி பல்வேறு வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா இன்னும் ஒரு படி மேலே சென்று அங்கு ரயில்களை இயக்க விரும்புகிறது.

அண்மைய காலமாக உலக நாடுகளின் கவனம் நிலவின் மீது அதிகம் விழுந்துள்ளது. இந்த சூழலில் தான் நாசா, ‘லூனார் ரயில்வே’ குறித்து பேசியுள்ளது. நிலவில் நீர் உள்ளதா, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தான் இது கவனத்துக்கு வந்துள்ளது.

அண்மையில் நாசாவின் என்ஐஏசி, டெக் சார்ந்து ஆறு கான்செப்ட்களை அறிமுகம் செய்தது. அதில் ஒன்றுதான் இந்த லூனார் ரயில்வே. FLOATஎன இந்த திட்டம் சொல்லப்படுகிறது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் மேம்பட்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்க நாசா முயல்கிறது.  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சந்திரனில் முதல் ரயில் அமைப்பை உருவாக்குவதற்கான வரைபடத்தை உருவாக்கியுள்ளது. 

நிலவில் ஓடும் ரயில் பூமியில் உள்ள ரயிலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதற்காக பிரத்யேக டிராக் தயார் செய்யப்படும். இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படமாகத் தோன்றலாம். ஆனால் சில வருடங்களில் இது நிஜமாகலாம். நாசாவின் வலைப்பதிவு ஒன்றில், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் ரோபோடிக்ஸ் பொறியாளர் எதெல் ஸ்க்லர், நிலவில் ரயில் திட்டம் பற்றிய தகவலை வழங்கியுள்ளார்.

FLOAT அமைப்பில்,  3-அடுக்கு படத் தடத்திற்கு மேலே காற்றில் பறக்கும் காந்த ரோபோக்களைக் கொண்டிருக்கும். இந்த பாதையில் கிராஃபைட் அடுக்கு இருக்கும். இது ரோபோக்களை டயாமேக்னடிக் லெவிடேஷன் மூலம் மிதக்கச் செய்யும். இரண்டாவது அடுக்கு ஃப்ளெக்ஸ்-சர்க்யூட்டாக இருக்கும், இது மின்காந்த உந்துதலை உருவாக்கும், இதனால் ரோபோக்கள் முன்னோக்கி செல்ல இயலும். சூரிய ஒளியில் இருந்து சக்தியை உருவாக்கும் சோலார் பேனலின் மெல்லிய அடுக்கு இருக்கும். FLOAT ரோபோக்களில் நகரும் பாகங்கள் எதுவும் இருக்காது. அவை பாதைக்கு மேலே பறக்கும். இதனால் சந்திர மேற்பரப்பு காரணமாக ரோபோக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.

Next Post

’நீங்கள் இருந்தால் எங்கள் இறையாண்மை பாதிக்கிறது’..!! இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றிய மாலத்தீவு அரசு..!!

Fri May 10 , 2024
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து இந்திய வீரர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் ஏழாம் பொருத்தம் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் அதிபர் முகமது முய்ஜுவின் சீன ஆதரவு நிலைப்பாடுதான். அதிபராக பொறுப்பேற்றp பின், சீனாவின் பேச்சை கேட்டு, இந்தியா உடனான உறவை கொஞ்சம் கொஞ்சமாக முறிக்க தொடங்கியுள்ளது. அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா […]

You May Like