நம் அனைவருக்கும் நடிகர் நாசரை நன்கு தெரியும். ஆனால் அவரது தம்பியை பற்றி பலருக்கு தெரியாது. அச்சு அசல் நடிகர் நாசரைப் போலவே இருக்கும் அவரின் உடன் பிறந்த தம்பி ஜவஹர். இவரும் சினிமாவில் நடித்து வருகிறார். ஓ.டி.டி. தளத்தில் வெளியான `ஜீவி-2′ படத்தில் ஜவஹர் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் அவர் கூறும் போது, “நான் பிரான்சில் நன்கு சம்பாதித்து கொண்டிருந்தேன். அப்போது எனது அம்மா, வயதான காலத்தில் கட்டாயம் உனக்கு ஒரு துணை வேண்டும் என்று கூறினார். இதனால் நான் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ஐடித்துறையில் வேலை செய்து வந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அந்தப் பெண், நான் வசதியானவன், நாசரின் தம்பி என்பதால் என்னை கல்யாணம் செய்து கொண்டார்.
திருமணமான 15 நாட்களில் அவர் கர்ப்பம் தரித்து விட்டார். ஆனால் அவருக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. அவரது பெற்றோர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மட்டும் தான் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள ஒத்துக்கொண்டார். இந்நிலையில், எங்களுக்கு மகன் பிறந்தான். மகன் பிறந்த பிறகு அவர் எனக்கு பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தார். நான் பிரான்சுக்கு சென்றால் தான் அதிகம் சம்பாதிக்க முடியும். அதனால் நான்கு சென்று சம்பாதித்து உங்களுக்கு அனுப்புகிறேன் என்று சொன்னேன்.
நான் அங்கு சென்ற உடனே, அவர் கைக்குழந்தையை விட்டுச் சென்று விட்டார். இதனால் 15 நாட்களில் பிரான்சில் இருந்து திரும்பி வந்து விட்டேன். அப்போது எனது 8 மாத குழந்தையின் தலை முன்பு சரி வராமல் இருந்தது. அதற்கு காரணம் அவர்கள் குழந்தைக்கு சரியான முறையில் அழுத்தம் கொடுத்து குளிப்பாட்டவில்லை. மேலும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லை என்று கூறி என்னிடம் பிரச்சினை செய்தார்.
இதனால் இன்று வரை நான் தான் எனது மகனுக்கு அம்மாவும் நான் தான்; அப்பாவும் நான்தான். அவனுக்காக தான் தற்போது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன்.’ என்று பேசினார்.
Read more: “கணவன் வேண்டாம், கணவனின் கிட்னி தான் வேணும்” கள்ளக்காதலுக்காக மனைவி செய்த காரியம்..