fbpx

தேசிய விருது வென்ற பழம்பெரும் நடிகை காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..

பழம்பெரும் நடிகையும், நாடகக் கலைஞருமான உத்தாரா பாக்கர் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 79..

தேசிய நடிப்பு பள்ளியில் நடிப்பை பயின்ற உத்தாரா பாக்கர், முகிஹாமந்திரி, மேனா குர்ஜாரி, துக்ளக் உள்ளிட்ட பல்வேறு நாடகங்களில் பல்வேறு வேடங்களில் நடித்தார். மேலும், தோகி (1995) சதாசிவ் அம்ராபுர்கர் மற்றும் ரேணுகா தஃப்தார்தார், உத்தராயன் (2005), ஷெவ்ரி (2006) ரெஸ்டாரன்ட் போன்ற மராத்தி படங்களில் அவர் நடித்துள்ளார்.. உத்தரா பாக்கர் தனது நாடக மற்றும் சினிமா நிகழ்ச்சிகளுக்காக பல விருதுகளை வென்றுள்ளார்.. ஏக் தின் அச்சனக் படத்திற்காக உத்தாரா பாக்கர் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் 1984 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றார்.

இந்த நிலையில் வயது மூப்ப்பு கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உத்தாரா பாக்கர், கடந்த சில தினங்களாக புனேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். புதன்கிழமை காலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.. உத்தரா பாக்கரின் மறைவு இந்தியத் திரைப்படத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், அவரது மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Maha

Next Post

11 ஆம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் ஜம்மு- காஷ்மீர், அரசியலமைப்பு பிரிவு 370, தொடர்பான தகவல்கள் நீக்கம்..

Thu Apr 13 , 2023
11 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் 370 வது பிரிவு தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது.. 11-ம் வகுப்பின் வரலாற்று புத்தகத்தில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் 370 வது பிரிவு தொடர்பான தகவல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நீக்கி உள்ளது. மேலும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளது.. 10வது அத்தியாயத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான […]

You May Like