கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம் தேசிய கோபால் ரத்னா விருதுகள் – 2022-க்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக வரவேற்கிறது. கடந்த 01.08.2022 முதல் https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 15.09.2022 ஆகும். இவ்விருதுகள் தேசிய பால்வள தினத்தையொட்டி, (26 நவம்பர் 2022) வழங்கப்பட உள்ளது.
விவசாயிகளின் நீடித்த வாழ்வாதாரத்திற்காக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பசு மற்றும் எருமை இனங்களை சிறப்பான முறையில் வளர்த்த பால்பண்ணை விவசாயி, சிறந்த செயற்கை கரூவூட்டல் தொழில்நுட்பம், சிறந்த பால் கூட்டுறவு சங்கம், பால் உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த தேசிய கோபால் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன.