fbpx

’அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு’..!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..!!

தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். பாஜக மாநில தலைவராக தேர்வாகும் நபர் நாளை பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் அவர்களிடம் இருந்து மட்டுமே வேட்புமனு பெறப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுவரை தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. எனவே, கட்சியின் தேசிய அளவிலான பணிகளுக்கு அண்ணாமலையில் திறமையை பாஜக பயன்படுத்தும்” என்றும் பதிவிட்டுள்ளார்.

Read More : அண்ணாமலையின் மாற்றத்திற்கு அதிமுகதான் காரணமா..? எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் கூறியது உண்மையா..? செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி..!!

English Summary

Annamalai, who has been the Tamil Nadu BJP president so far, has achieved commendable achievements.

Chella

Next Post

இனி நீங்கள் சொல்லும் அனைத்தையும் ChatGPT நினைவில் வைத்திருக்கும்..! வந்தது புது அப்டேட்..!!

Fri Apr 11 , 2025
ChatGPT gets upgraded memory feature: Here's how it will improve this AI chatbot for you

You May Like