fbpx

தேசிய ‘டிரிபிள் ஜம்ப்’!. தங்கம் வென்றார் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல்!. 16.50 மீ., நீளம் தாண்டி அசத்தல்!

Praveen Chitravel: தேசிய விளையாட்டு ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டி நேற்று நடந்தது. தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல், 16.50 மீ., நீளம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் மற்றொரு வீரர் முகமது சலாஹுதீன், 16.01 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் வென்றார். கேரளாவின் முகமது முஹாசின் (15.57 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார். ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் ராகுல் குமார் (21.06 வினாடி), நிதின் (21.07) இரண்டு, மூன்றாவது இடம் பிடிக்க, வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தன. ஒடிசா வீரர் அனிமேஷ் (20.58) தங்கம் வென்றார். பெண்களுக்கான ‘ஹெப்டத்லான்’ போட்டியில் தமிழகத்தின் தீபிகா, வெண்கலம் கைப்பற்றினார்.

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில் தமிழகத்தின் அக்ஸ் பத்ரிநாத், லட்சுமி பிரபா ஜோடி, 6-4, 6-1 என கர்நாடகாவின் நிக்கி, சோகா ஜோடியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோற்ற தமிழக வீரர் மணிஷ் சுரேஷ் குமார், கர்நாடகாவின் பிரஜ்வலுக்கு வெண்கலம் கிடைத்தது. சர்வீசஸ் வீரர் இஷாக் இக்பால், 3-6, 6-4, 7-6 என போராடி, குஜராத்தின் ஜாவியாவை சாய்த்து தங்கம் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பைனலில் குஜராத்தின் வைதேகி, 6-4, 6-4 என நேர் செட்டில் மகாராஷ்டிராவின் ஜீல் தேசாயை வென்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார். அரையிறுதியில் வீழ்ந்த ஆகான்ஷா (மகாராஷ்டிரா), ஆமோதினி (கர்நாடகா), வெண்கலப் பதக்கம் பெற்றனர். தேசிய விளையாட்டில் 14 நாள் முடிந்த நிலையில், இதுவரை தமிழகம் 21 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கம் வென்று, 6வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் அணி (49 தங்கம், 18 வெள்ளி, 19 வெண்கலம் என 86) முதலிடத்தில் உள்ளது.

Readmore: மகா கும்பமேளா!. முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் நீராடினர்!.

English Summary

National ‘Triple Jump’!. Tamil Nadu athlete Praveen Chitravel won gold!. 16.50 m., amazing jump!

Kokila

Next Post

அதிகாலையில் பயங்கரம்..!! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!! 3 பேர் துடிதுடித்து பலி..!! விருதுநகரில் பெரும் சோகம்..!!

Wed Feb 12 , 2025
The tragic incident in which three people died in a road accident in Virudhunagar.

You May Like