fbpx

’வரி பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம்’..! பரபரப்பு அறிவிப்பு

ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீா்வு காணாவிட்டால், நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய வணிகா் சம்மேளனத்தின் (சிஏஐடி) பொதுச்செயலாளா் பிரவீன் கண்டேல்வால் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பிரவீன் கண்டேல்வால் செய்தியாளா்களிடம் பேசுகையில், ”பிராண்ட் அல்லாத பாக்கெட் செய்து சீலிடப்பட்ட அரிசி, கோதுமை, தயிா், மாவு போன்ற பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. கிரைண்டருக்கு 18 சதவீதமாக வரி உயா்ந்துள்ளது. 40 வேளாண் விளை பொருட்களுக்கு செஸ் வரி விதிப்பால் சிறு வணிகா்கள், விவசாயிகள், அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். மோட்டாா் பம்ப் செட்டுகள், வேளாண் உபகரணங்கள் விலை அதிகரிக்கும். இதனால், தொழில்முனைவோா் பெரும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும்.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; சென்னையில் இன்று முதல் கடையடைப்பு!

செஸ்வரி தொடா்பான பிரச்சனைகளுக்கு தமிழக முதல்வரையும், ஜிஎஸ்டி தொடா்பான பிரச்சனைகளுக்கு மத்திய நிதி அமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிட தீா்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீா்வு எட்டப்படாவிட்டால், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் செயற்குழு கூட்டப்பட்டு, தமிழகம் தழுவிய ஆா்ப்பாட்ட அறிவிப்பு வெளியிடப்படும். அதேபோன்று ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்குத் தீா்வு காணப்படாவிட்டால் நாடு தழுவிய அளவில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

13-ம் உஷார் மக்களே... மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...!

Sun Jul 10 , 2022
தமிழகத்தில் வரும் 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 12 , […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like