நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கிய பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை 5ஆம் வகுப்பு மாணவன் செய்வான். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள். இது எங்களுக்கு தெரியாதா?
உலகமே நவீன தொழில் நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் இருக்கிறது. காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இனிமேல் இயற்கை சீற்றங்கள் அடிக்கடி வரப்போகின்றன. பேரிடர் சீற்றங்களை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லையெனில் சென்னை வானிலை ஆய்வு மையம் எதற்கு? என ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பினார்.