வால்நட் ஓட்டை உடைப்பது எவ்வளவு கடினம் என்பதை எல்லாருக்கும் தெரியும் ஆனால் இங்கு ஒருவர் தனது தலையால் உடைத்து கின்னஸ் உலக சாதனை செய்துள்ளார். நவீன் குமார் 27 வயதான இவர் ஒரு நிமிடத்தில் 273 வால்நட் பருப்புகளை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த முஃமத் ரஷீத் என்பவர் 254 பருப்புகளை உடைத்து உலக சாதனை படைத்திருந்தார். இந்த இருவரும் பல ஆண்டுகளாக சாதனைக்காக போட்டியிட்டு வருகின்றனர். ரஷீத் 2014 ஆண்டில் வால்நட்டை உடைத்து சாதனை படைத்தார். அதன்பின் 2016ஆம் ஆண்டில் அந்த சாதனையை அவரே முறியடித்தார்.
தற்போது நவீன் குமார் 273 பருப்புகளை உடைத்து முதலிடம் பிடித்தார்.இந்த சாதனையின் மூலம் நவீன் குமார் உலகில் முதன்மையான மனிதர் என தன்னை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார். இதன் வீடியோவை கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ பக்கம் ட்விட்டர் வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.