fbpx

நவராத்திரி 3ம் நாள்!… பகை தீர்க்கும் வராகி அம்மன்!… அலங்காரம், நைவேத்தியம், மந்திரம் முழு விபரம் இதோ!

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களை துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம். நவராத்தியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரும் தவம் செய்து ஒரே சக்தியாக ஒன்று பட்டு, மகிஷனை வதம் செய்து, வெற்றி கொண்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

நவராத்திரியின் முதல் நாளில் அம்மனை உமா மகேஸ்வரியாகவும், 2வது நாளில் ராஜ ராஜேஸ்வரியாகவும் அலங்கரித்து வழிபட்டோம். இதைத் தொடர்ந்து நவராத்திரியின் 3 ம் நாளில் அன்னையை வாராகி அல்லது வராகி அம்மனாக அலங்கரித்து வழிபட வேண்டும். பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வராகி தேவி. இவள், பராசக்தியின் போர் படைக்கு தலைமை தாங்கி, வெற்றியை பெற துணையாக நின்றவள் ஆவாள். அதனால் நவராத்திரி வழிபாட்டில் வராகி அம்மனுக்கு முக்கிய இடம் உண்டு.

நவராத்திரியின் 3ம் நாளில் மலர் வகை கோலம் இட்டு, அம்மனை எழுந்தருளச் செய்ய வேண்டும். மலர்களில் சம்பங்கியும், இலைகளில் துளசியும் கொண்டு அம்மனை அர்ச்சிக்க வேண்டும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கலும், சுண்டல் வகையில் காராமணி சுண்டலும், பழ வகைகளில் பலாப்பழமும் அம்மனுக்கு படைக்க வேண்டும். நவராத்திரியின் 3 ம் நாளில் அம்மனை நீல நிற வஸ்திரத்தால் அலங்கரிக்க வேண்டும். நாமும் நீல நிறத்தில் உடை அணிந்து கொள்ளலாம். பொதுவாகவே நீற நிறம் என்பது வெற்றியின் அடையாளமாக கருதப்படுவதாகும். இந்த நாளில் காம்போதி ராகத்தில் அமைந்த பாடல்களை பாடி அம்மனை வழிபடவேண்டும்.

நவதுர்க்கைகளில் 3 ம் நாளுக்குரிய தேவியான சந்திரகாண்டாவையும் வழிபடுவது சிறப்பானது. புலியை வானமாக கொண்ட இந்த தேவி, தலையில் பிறையை சூடியவளாக, எட்டு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். எட்டு கைகளிலும் பல விதமான ஆயுதங்களை ஏந்தியவளாக இருக்கும் இந்த திருக்கோலம் வீரம் மற்றும் தைரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சந்திரகாண்டா தேவி, தன்னுடைய பக்தர்களை எந்த விதமான தீமையும் நெருங்க விடாமல் காக்கக் கூடியவள்.

நவராத்திரியின் 3 ம் நாளில் அம்பிகையை வராகி ரூபத்தில் வழிபட்டால் பகை அழியும், கடன் தொல்லை தீரும், மன அமைதி, மனத்தெளிவு ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வராகி மந்திரம்: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல் ஹஸ்தாயை தீமஹி தந்நோ வராகி ப்ரசோதயாத் பூஜையின் போது நெய் விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பானது.

Kokila

Next Post

அடுத்த அதிரடி!... ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை!... பயன்கள் என்ன?

Tue Oct 17 , 2023
ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை குறித்து தெளிவுபடுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பள்ளிகள் தோறும் சிறப்பு பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தை நடத்த கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, ஒரே நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு ஒரே வரி என […]

You May Like