Navratri 4th day: துர்கா தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூன்று தேவிகளும் சேர்ந்து மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை வதம் செய்ததே நவராத்திரி ஆகும், 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை மூன்று, மூன்று நாட்களாக பிரித்து 3 தேவிகளுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்காதேவிக்காக வழிபாடு நடத்தப்படுகிறது.
அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமிக்காக வழிபாடு நடைபெறும். அந்த வகையில் நான்காவது நாள் அம்பிகையை மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது . நவ துர்க்கையில் கூஷ்மாண்டா துர்க்கையை வணங்கும் நாளாகவும் கருதப்படுகிறது .கூஸ்மாண்டா என்றால் இந்த அகிலத்தை படைத்தவள் என்று பொருளாகும்.
நவராத்திரியின் நான்காம் நாள் (Navratri Day 4) அதாவது அக்டோபர் 6 ஆம் தேதி காலை 9:15 மணி முதல் 10.15 மணி வரையிலான நேரத்திற்குள் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். அதேபோல் மாலை 4:45 மணி முதல் 5.45 மணிக்குள் மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். முக்கியமாக ராகு காலம், எமகண்டம் நேரத்தில் பூஜை செய்ய வேண்டாம்.
மகாலட்சுமியை அலங்கரித்து வழிபட வேண்டும். மஞ்சள், அரிசி கலந்த அட்சதை அரிசியை கொண்டு, படிக்கட்டுகள் வடிவில் கோலம் போட்டு வழிபட வேண்டும். ஜாதி மல்லி, கதிர்பச்சை என்கிற செடியின் இதழால் அர்ச்சனை செய்ய வேண்டும். கதம்ப சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும், பாட வேண்டிய ராகம் பைரவி. பழங்களில் கொய்யாப்பழம் படைக்க வேண்டும். இந்த நாளில் அன்னைக்கு கறுநீல நிற வஸ்திரத்தால் அலங்கரிக்க வேண்டும். நாமும் கறுநீல நிற உடை அணிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்.
கடன் தொல்லை தீரும். கடன் என்றால் மற்றவர்களிடம் வாங்கியிருக்கும் கடனை தீர்ப்பதோடு, பிறவி கடனும் தீரும். மகா லட்சுமி என்றாலே தெரியும், செல்வங்களுக்கான தேவி. இவரை வழிபட்டு நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும் பெறலாம்.
Readmore: ஜம்முவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?. ஆதிக்கம் செலுத்துமா பாஜக?. எக்ஸிட் போல் கணிப்பு!.