fbpx

’நினைச்ச மார்க் வரல’..!! 600/494 எடுத்தும் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!! தேனியில் அதிர்ச்சி..!!

பிளஸ்2-வில் 600-க்கு 494 மதிப்பெண் எடுத்திருந்தும், பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயவர்மன் (17). இவர், கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். தற்போது நடைபெற்ற பொதுத்தேர்வில் 600-க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், மாணவன் வீட்டில் தனியாக இருந்தபோது, தனது வீட்டின் 3-வது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். வெகு நேரமாக வீட்டில் ஆள் இல்லாததால், உறவினர்கள் மாணவனை தேடிப் பார்த்தபோது, மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவன் மதிப்பெண்கள் வெளியிட்ட கடந்த இரண்டு நாட்களாக நான் நினைத்தது போல் மதிப்பெண் எனக்கு கிடைக்கவில்லை என மன உளைச்சலை இருந்ததாக தெரிவித்தனர்.

தான் 500க்கு மேல் மதிப்பெண் வாங்குவேன் என நினைத்திருந்ததாகவும், தன்னால் 500க்கு மேல் வாங்க முடியவில்லை என மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : மாதம் ரூ.2,80,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Chella

Next Post

இந்த பிரச்சனை இருப்பவர்கள் கரும்பு ஜூஸை தொடவே கூடாது..!! பிரச்சனை இன்னும் மோசமாகும்..!!

Fri May 10 , 2024
கரும்பு சாறு இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு கோடை கால பானமாகும். இது நமது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் இதன் விலையும் மலிவானது. இதில் கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கோடையில், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மொத்தத்தில் இந்த சாறு குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால், பலருக்கு இது நன்மையாக இருந்தாலும், சிலருக்கு தீங்கு. […]

You May Like