சென்னையில் திமுக திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.
திமுக முன்னாள் ஒன்றிய இணை அமைச்சரும் தற்போதைய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு கல்லூரிகள் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை. அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு, தி.நகரில் உள்ள ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனை உள்பட சென்னையில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து, சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மணல் ஒப்பந்ததாரர்கள், மின்சாதன பொருட்கள் உற்பத்தியாளர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றன