fbpx

பிஜேபி பணம் கொடுக்கிறதா…? “காங்கிரஸ் கணக்கு ரூ.65 கோடியில் கை வைத்த ஐடி” ஜனநாயக விரோதம் என குற்றச்சாட்டு.!

அரசு துறைகள் இது போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இந்தியாவில் ஜனநாயக முடிந்து விடும் என காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார் எனினும் காங்கிரஸ் கட்சிக்கு நீதித்துறை மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

முந்தைய ஆண்டுகளில் இந்த நிதியைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழக்குகள் நடந்து கொண்டிருந்த போதிலும், வருமான வரித் துறை பல்வேறு வங்கிகளில் உள்ள தனது கணக்குகளில் இருந்து 65 கோடி ரூபாயை “ஜனநாயக விரோதமாக” எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.

நேற்றைய தினம் வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கணக்குகளில் இருந்து 65 கோடி ரூபாய் பணத்தை அரசாங்கத்திற்கு மாற்ற வேண்டும் என கட்டளையிட்டதாக அந்தக் கட்சியின் பொருளாளர் தெரிவித்திருக்கிறார். இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் அமைப்பிலிருந்து 5 கோடி ரூபாயும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து 60.25 கோடி ரூபாயும் அரசாங்க கணக்கிற்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது பிஜேபி அரசின் நடவடிக்கை தான் எனவும் தனது ‘X’ வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார் மக்கன். மேலும் எடுத்த பணத்தை பிஜேபி திரும்பத் தருமா.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தேசிய கட்சிகள் வருமான வரி கட்டுவது சகஜமான ஒரு நடடிக்கையா.? பிஜேபி வருமான வரி கட்டுகிறதா.? இல்லை பிறகு காங்கிரஸ் கட்சி மட்டும் ஏன் வலுக்கட்டாயமாக 210 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது.? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இன்றைய வருமான வரித்துறை நடவடிக்கையின் போது தங்கள் வழக்கை முன்வைத்ததாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் தெரிவித்திருக்கிறார். இதற்கான விசாரணை நாளையும் தொடர உள்ளதாக தெரிவித்தார். சர்ச்சைக்குரிய நீதியானது இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொழிலாளர்கள் இயக்கத்தின் அடிமட்ட தொண்டர்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடை பணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் 3 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60.25 கோடி டிமாண்ட் டிராப்ட்களாக எடுக்கப்பட்ட நிலையில், இந்திய இளைஞர் காங்கிரஸின் கணக்குகளில் இருந்து ரூ.5 கோடி எடுக்கப்பட்டதாக மக்கன் தெரிவித்தார். 17.65 கோடி ரூபாய் பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இவை தவிர 41.85 கோடி ரூபாய் காங்கிரஸ் கட்சியின் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.மேலும் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கணக்கில் இருந்து 74.62 லட்சம் என 60.25 கோடி ரூபாய் எடுத்ததாக தெரிவித்தார்.

210 கோடி வருமான வரிக் கோரிக்கை காரணமாக காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகள் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டதால் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்தது. இருப்பினும், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், முடக்கப்பட்ட கணக்குகளை அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் வரை இயக்க அனுமதித்ததால், கட்சிக்கு அவகாசம் கிடைத்தது. திடீரென காங்கிரஸ் கட்சியின் முக்கிய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் அரசியல் நடவடிக்கைகள் கடுமையாக பாதித்ததாக தெரிவித்தது.

வரம்பை மீறி நிதி வசூல் செய்ததால் காங்கிரஸ் கட்சியின் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

English Summary: Income tax withdraw 65 crore rupees from various accounts of congress party. The party Treasurer Ajay Maken condemn it as undemocratic.

Next Post

தினமும் ஒரே மாதிரி ரசம் செய்யாமல், கொஞ்சம் வித்தியாசமாக கேரளா ஸ்டைல் தேங்காய் பால் ரசம் செய்து பாருங்கள்.!?

Thu Feb 22 , 2024
பொதுவாக பலரது வீட்டிலும் சோறு, குழம்பு, கூட்டு என தினமும் வகை வகையாக செய்து சாப்பிட்டிருப்போம். கூடவே செரிமானத்திற்காக ரசமும் செய்து சாப்பிடுவோம். இந்த ரசம் தினமும் ஒரே மாதிரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக, கேரளா ஸ்டைலில் சுவையான தேங்காய் பால் ரசம் செய்து பாருங்கள்? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.தேவையான பொருட்கள்:தக்காளி – 2, புளி – நெல்லிக்காய் அளவு, நீர் போன்ற தேங்காய் […]

You May Like