fbpx

நெருக்கடியில் இருந்த பொருளாதாரம், ‘UPA’ விட்டு சென்ற சவால்களை முறியடித்த ‘NDA’ | வெள்ளை அறிக்கையின் 15 முக்கிய அம்சங்கள்.!

இந்திய பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் 10 ஆண்டுகளின் பொருளாதாரச் செயல்பாடுகளை BJP தலைமையிலான NDA அரசாங்கத்தின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் வகையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .

2014 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொது நிதி மோசமான நிலையில் இருந்ததாகவும் நிதி முறை கேடுகள் மற்றும் ஊழல் நிறைந்ததாக கடந்த ஆட்சி இருந்தது என வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது.

அரசாங்கத்தின் ‘வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட 15 முக்கியமான விஷயங்கள் :

விரைவான திருத்தங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொண்டது, உறுதியான மேற்கட்டுமானத்தை உருவாக்கியது.

அரசியல் மற்றும் கொள்கை ஸ்திரத்தன்மையுடன் பொறுப்பேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதற்கு முன்பு பதவியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி போல் இல்லாமல் பொருளாதாரம் நலனுக்காக பல கடுமையான முடிவுகளை எடுத்தது.

2014 இல் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்தது. அப்போது வெள்ளை அறிக்கை எதிர்மறையாக அமைந்திருந்தால் அது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சிதைத்திருக்கும்.

பிரதமர் மோடி அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகம் இந்தியாவை நிலையான உயர் வளர்ச்சியின் உறுதியான பாதையில் கொண்டு சென்றது.

வங்கி நெருக்கடி காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தின் மிக முக்கியமான மற்றும் பெயர் பெற்ற மரபுகளில் ஒன்றாக இருந்தது .

பொது நிதி மோசமான நிலையில் இருந்தது, பொருளாதார தவறான மேலாண்மை மற்றும் நிதி ஒழுக்கமின்மை இருந்தது, மற்றும் பரவலான ஊழல் இருந்தது.

2014ஆம் வருடம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது சேதமடைந்த பொருளாதார நிலை நாட்டில் நிலவியது. பொருளாதாரத்தின் அடித்தளத்தை வளர்ச்சியை நோக்கி செயல்படுத்த மீண்டும் கட்டமைக்க வேண்டி இருந்தது.

2014ஆம் வருடத்திற்கு முன்பிருந்த பொருளாதார சிக்கல்கள் மற்றும் சவால்கள் தேசிய ஜனநாயக கூட்டணியால் சமாளிக்க வேண்டி இருந்தது .

மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதும், மிகவும் தேவையான சீர்திருத்தங்களுக்கு ஆதரவை உருவாக்குவதும் காலத்தின் தேவையாக இருந்தது.

காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் பொருளாதார நடவடிக்கைகளை எளிதாக்குவதில் மோசமாகத் தோல்வியடைந்தது, மாறாக பொருளாதாரத்தைத் பாதிக்கும் தடைகளை உருவாக்கியது.

கருவூலத்திற்கும் நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறைக்கும் பெரும் வருவாய் இழப்புகளை கொண்டு வரும் ஏராளமான மோசடிகள் இருந்தன.

கடந்த 10 ஆண்டுகளில் முந்தைய அரசாங்கம் விட்டுச் சென்ற பல சவால்களை தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கரமாக முறியடித்து இருக்கிறது.

நமது அரசாங்கம், அதன் முன்பிருந்த அரசாங்கம் போலல்லாமல், ஒரு உறுதியான மேற்கட்டுமானத்தை உருவாக்குவதோடு பொருளாதாரத்தின் அடித்தளத்திலும் முதலீடு செய்தது.

20047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கு இருப்பதால் நான் உறங்குவதற்கு முன் இன்னும் பல தூரங்கள் செல்ல வேண்டி இருக்கிறது வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அரசியலை முன்னிறுத்தாமல் தேசத்தின் நலனில் நம்பிக்கை வைத்து செயல்படுகிறது என அந்த வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.

Next Post

முன்னோர்களின் உணவான மாப்பிள்ளை சம்பா அரிசி.! ஆண்மையை அதிகரிக்குமா.!?

Thu Feb 8 , 2024
“உணவே மருந்து”  என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த வகையில் நம் முன்னோர்கள் பல வகையான ஊட்டச்சத்தை கொண்ட உணவுகளை தினமும் உண்டு நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்து வந்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும், துரித உணவுகளும் மட்டுமே அதிகம் விரும்பி உண்ணு வருகிறோம். நம் முன்னோர்கள் காலத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்வகைகள் இருந்து வந்ததாக கூறப்பட்டு வருகிறது. அவற்றை உணவாக எடுத்துக் […]

You May Like