fbpx

உலகின் பொருளாதார பட்டியலில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளியது இந்தியா …….

உலகின் பொருளாதார பட்டியலில் இந்தியா 5 வது இடத்தை பிடித்துள்ளது. மிகப் பெரிய நாடுகளின் பட்டியலில் இருந்து பிரிட்டனை பின்னுக்குத்த்ளி 5 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனின் பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2019 ம்ஆண்டு 7 வதுஇடத்தில் இந்தியா இருந்தது. யு.கே. 5 வது இடத்திலும் 4 வது இடத்தில் ஜெர்மனி , 3வது இடத்தில் ஜப்பான் இருந்தது. இந்தஆண்டு 5வது இடத்தில் இந்தியா 6 வது இடத்தில் யு.கே. 4வது இடத்தில் ஜெர்மனி , 3வதாக ஜப்பான் உள்ளது.

ஜூன் 2022-ம் நிதியாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்தியா பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகப் பொருளாதார தர வரிசையில் கடந்த முறை யு.கே.  தரவரிசையில் முன்னிலை வகித்தது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இழப்பை சந்தித்தன் காரணமாக பொருளாதார தர வரிசை பட்டியலில் பின்னுக்கு சென்றுள்ளது. 2024ம் ஆண்டிலும் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் என்றும் இந்தியாவை யு.கே. அரசு முந்துவது மிகக் கடினம் எனவும் பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலான நாடுகள் போர் , மற்றும் தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட இழப்பால் இழப்பை சந்தித்துள்ளது.

அண்டை நாடான சீனாவின் ஜி.டி.பி. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் , 4.8 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. பல்வேறு அழுத்தங்களால் சீனாவால் அதிகமாக வளர்ச்சியடைய முடியவில்லை. குறிப்பாக ரியல்  எஸ்டேட் சந்தையில் அதிகப்படியான கடன் , சிறிய அளவில் கடன் தரும் நிறுவனங்கள் இறுக்கமான நிலையை சந்தித்து வருகின்றனர். நடப்பு காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி இந்தியாவில் 7  முதல் 7.5 வரை  வளர்ச்சி விகிதத்தை அடைய முடியும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இதையடுத்து வெகு விரைவிலேயே உலக நாடுகளின் தர வரிசை பட்டியலில் 3 வது இடத்தை அடைய முடியும் என்பது வல்லுனர்களின் கருத்து.

Next Post

மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்த இரக்கமற்ற தாய் …படிப்பில் போட்டியால் சக மாணவியின் தாய் வெறிச்செயல் …..

Sat Sep 3 , 2022
புதுச்சேரி அருகே தனது மகளின்  வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த இரக்கமற்ற தாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காரைக்கால் அருகே  தனியார் பள்ளியில் பால மணிகண்டன் என்ற சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றான். அவனுக்கு உறவினர் ஒருவர் கொடுத்ததாக குளிர்பானத்தை பாதுகாவலரிடம் கொடுக்கச் சொல்லி மாணவருக்கு பெண் ஒருவர் கொடுத்துள்ளார். இதையடுத்து பால மணிகண்டன் அந்த […]

You May Like