கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தில் குடியிருப்பவர் ராஜசேகரன் (39). இவர் ஒரு விவசாயி. இவருக்கும், அந்த பகுதியை வசிக்கும் அருணதேவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நியையில், சம்பவத்தன்று ராஜசேகரனின் தந்தை தட்சிணாமூர்த்தி மாடு ஓட்டி சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அருணதேவன் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்து இருக்கிறார்.
அப்போது, அவர் தட்சிணாமூர்த்தியிடம், கீழே விழுந்ததற்கு அவர் தான் காரணம் என்று சொல்லி, வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அருணதேவன் மற்றும் அவரது தம்பிகள் மூன்று பேர் சேர்ந்து ராஜசேகரனை அரிவாளால் வெட்டினர். இதனால் படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தியை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜசேகரன் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அருணதேவன், அவரது தம்பிகள் ஆனந்தவேல், அசோக் குமார், அன்பு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அருணதேவன், ஆனந்தவேல் ஆகியோரை கைது செய்தனர்.