fbpx

திருப்பூர் அருகே….! பஞ்சாலையில் பற்றிய தீ அனைத்தும் சாம்பல் அதிர்ச்சி சம்பவம்…..!

திருப்பூர் அருகே தனியார் பஞ்சாலையில் உண்டான பயங்கர தீ விபத்தில் 70 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. திருப்பூர் மாவட்டம் பூமனூரில் செயல்பட்டு வரும் பஞ்சாலை ஒன்றில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆலையில் நேற்று பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் வெகுநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிற்கான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானது. இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

ரேஷன் கார்டு வைத்திருக்கிறீர்களா அப்படி என்றால் இது உங்களுக்கான செய்தி தான்…..! உடனடியாக இந்த வேலையை முடியுங்கள் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

Wed May 31 , 2023
நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். ஏனெனில் இலவச ரேஷன் அரிசி வாங்குபவர்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதியை மனதில் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இல்லையென்றால் இலவச ரேஷன் பெரும் வசதியை பெறுவதில் சிக்கல் உண்டாக்கலாம். அதாவது ரேஷன் கார்டைப் பொதுமக்கள் தங்களுடைய ஆதார் உடன் இணைக்க அரசு […]

You May Like