விழுப்புரம் மாவட்டத்தில் காதலனின் கண் முன்பே காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சார்ந்த பிளஸ் டூ மாணவனும் அய்யன் கோவில் பட்டு கிராமத்தைச் சார்ந்த பிளஸ் 2 மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்றாக படிக்கும்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் காதலர்கள் இருவரும் அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த மூன்று நபர்கள் அவர்கள் இருவரையும் அடித்து காயப்படுத்தி அவர்களிடமிருந்த பணம் செல் போன் மற்றும் நகைகளை பறித்திருக்கின்றனர்.
அத்தோடு அவர்களை விட்டு விடாமல் அந்த மாணவனை கத்தியால் குத்தி விட்டு அவனது காதலியை மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடிய மூன்று காமுகன்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.