fbpx

ஆண்கள் ஈட்டி எறிதலில் முதல்முறையாக நீரஜ் சோப்ரா முதலிடம்!… உலக சாதனை படைத்து அசத்தல்!

ஆண்கள் ஈட்டி எறிதலில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்து நீரஜ் சோப்ரா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஆண்கள் ஈட்டி எறிதலில் (ஜாவ்லின் த்ரோ) உலக அளவில் முதன்முறையாக முதலிடம் பிடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது அவரது ஈட்டி எறிதலில் முக்கிய மைல்கல் சாதனையாகும். நீரஜ் சோப்ரா 1455 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை விட 22 புள்ளிகள் முன்னேறி முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார். இந்திய விளையாட்டு ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட்டில் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்திலிருந்தார், அதன்பிறகு மே 5 அன்று நீரஜ் தோஹா டயமண்ட் லீக்கில் 88.67 மீ எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

10ம் வகுப்பு முடித்தவரா நீங்கள்?... ரூ.60000 சம்பளத்தில் வனத்துறையில் வேலைவாய்ப்பு!

Wed May 24 , 2023
மாநில வன சேவைக்கான மத்திய அகாடமி (CASFOS) டிரைவர் மற்றும் ஆய்வக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய வன சேவைக்கான மத்திய அகாடமி (CASFOS) கார் டிரைவர் மற்றும் ஆய்வக உதவியாளருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய வன சேவைக்கான மத்திய அகாடமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.casfos.com -ல் விண்ணப்பிக்கலாம். CASFOS டிரைவர் & லேப் அட்டெண்டன்ட் வேலை அறிவிப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் […]

You May Like