fbpx

வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா..! சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை..!

டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் ஒலிம்பிக் நாயகர் நீரஜ் சோப்ரா.

அண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டின் லுசானேவில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். அதோடு 2023 உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். அந்தவகையில், சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் ஈட்டி எறிதல் போட்டியில்  நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார்.

வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா..! சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை..!

இதன் மூலம் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா, டயமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இதனால், டயமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நடந்த காமென்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விளையாட்டை தொடர முடியவில்லை. இந்நிலையில்ம் அவர் தற்போது வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Chella

Next Post

செம மாஸ்..! மீண்டும் தரமான கம்பேக் கொடுத்த கோலி..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Fri Sep 9 , 2022
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக விராட்கோலி சதமடித்து தனது கம்பேக்கை அளித்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய கடைசி சூப்பர் 4 போட்டி இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முன்னாள் கேப்டன் விராட்கோலி சதமடித்து அசத்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். […]
செம மாஸ்..! மீண்டும் தரமான கம்பேக் கொடுத்த கோலி..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

You May Like