2024-25ஆம் கல்வியாண்டின் சில முக்கிய தேர்வுகளுக்கான தேர்வு காலெண்டரை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அடுத்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2024 மே 5ஆம் தேதி நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் 2024 ஜூன் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ (JEE) தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜேஇஇ முதல் அமர்வு தேர்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரையும், இரண்டாவது அமர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
மேலும், நாடு முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கியூட் நுழைவு தேர்வு மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் நடைபெறும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.