இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு கட்டணத்தை தற்போது தேசிய தேர்வு முகமை உயர்த்தியுள்ளது. அதன்படி, கடந்த வருடத்தை விட தற்போது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 100 ரூபாய் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.