fbpx

நிச்சயமாக நீட் தேர்வு ரத்து…! திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடக்கம்…!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கவுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கவுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில், மருத்துவ அணி – மாணவர் அணி நிர்வாகிகளுடன் தொடங்கி வைக்கப்படுகிறது.

நீட் ஒழிப்புக்கான இந்த முன்னெடுப்பு, கழக மாவட்டங்கள் தோறும் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்வுகளில், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும், நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் காப்பதற்காக இடப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என 86,342 பேரிடன் கருத்துக்களைப் பெற்றனர். விரிவான பரிந்துரைகளை 2021ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி அரசுக்கு அளித்தது.

இதில், எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது. எனவே, 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டத்தை போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

இனி டீ மற்றும் காபிக்கு பதில் இதனை பருகி பாருங்கள்..! எடை குறைப்பு முதல் நீரிழிவு நோய் வரை குணப்படுத்தும் செம்பருத்தி தேநீர்…

Sat Oct 21 , 2023
செம்பருத்தி இதழ்களின் நன்மைகள் ஏராளம் மற்றும் பல ஆரோக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. செம்பருத்தி மலர்களின் உலர்ந்த இதழ்களை காய்ச்சி தேநீர் தயாரிக்கப்படுகிறது. செம்பருத்தி இலைகளை தண்ணீரில் போட்டும் இந்த டீயை தயாரிக்கலாம். இருப்பினும், செம்பருத்தி இதழ்களால் செய்யப்பட்ட தேநீர் பல நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது. இது காயங்களை ஆற்றும். இந்த தேநீர் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது மற்றும் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது, […]

You May Like