சென்னை குரோம்பேட்டை, குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம், இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று ‘ஏ’ கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றார். இவர் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வுக்காக தனியார் பயற்சி மையத்தில் முறையாக பயிற்சி ஏடுத்தார், அனால் தொடர்ந்து இருமுறை நீட் தேர்வு எழுதியும் இவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதனால் மூன்றவது முறை தேர்வு எழுதுவதற்காக, அண்மையில் நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணம் கட்டியுள்ளார். 2 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத விரக்தியில் இருந்த மாணவர் ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிட்லப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.