fbpx

NEET: நீட்டிக்கப்பட்ட ஒருநாள் கால அவகாசம்!… மிஸ் பண்ணிடாதீங்க!

NEET: இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை (ஏப்ரல் 10) வரை ஒருநாள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு வாயிலாகவே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. அதன்படி 2024-25ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவு செய்வதற்கு இன்று (ஏப்ரல் 9) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நாளை (10ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து என்டிஏ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 5ம் தேதி நாடு முழுவதும் 14 இடங்களில் நடைபெற உள்ள இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு மேற்கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக நாளை இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Readmore: Modi: பிரதமர் மோடியின் டிகிரி சர்டிபிகேட் விவகாரம்…! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!

Kokila

Next Post

ஜாலி...! 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை...! முழு விவரம்

Tue Apr 9 , 2024
இன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித்தாள், கணிதம், அறிவியல் என அனைத்து பாடங்களுக்கும் தேர்வு நடைபெற்றது. இறுதி நாளான நேற்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் […]

You May Like