தேசிய தேர்வு வாரியம் நீட் முதுகலை 2023 தேர்வை இன்று நடத்த உள்ளது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். நீட் முதுகலை 2023 தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தமிழகத்தில் தேர்வு மையங்கள் தொலைவில் இருப்பதால், தேர்வெழுத மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
தேர்வு வாரியம் இதற்கு முன்பு சென்னைக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்குவதாக உறுதியளித்திருந்தாலும், பல தேர்வர்களுக்கு ஆந்திராவில் உள்ள விஜயவாடா, தெலுங்கானாவில் உள்ள நல்கொண்டாவில் போன்ற தொலைதூர இடங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்வுகள் கடும் மன உளைச்சலுக்கும் சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.