நீட் முதுகலை தேர்வு முடிவுகளை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தேசிய தேர்வு வாரியம் நீட் முதுகலை 2023 தேர்வை கடந்த 5-ம் தேதி நடத்தி முடித்தது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து தேர்வை எழுதினர். தற்பொழுது தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ முடிவின்படி, டெல்லியில் உள்ள VMMC & SAFDARJUNG மருத்துவமனையைச் சேர்ந்த ஆருஷி நர்வானி என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததுள்ளார். பிரேம் திலக் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
அகில இந்திய அளவில் 50% ஒதுக்கீட்டுத் தகுதிப் பட்டியலைத் தனியாக வெளியிடும் என்று கூறியுள்ளது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான natboard.edu.in இல் தங்கள் முடிவுகளை ஆன்லைனில் பார்க்கலாம்.