fbpx

நேருவின் முதல் மனைவி காலமானார்..!! ஊரே ஒதுக்கி வைத்த கதை உங்களுக்கு தெரியுமா..?

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, 1959ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்குவங்கம்-ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இடைப்பட்ட தன்பாத் பகுதியில் பஞ்செட் அணை திறக்கப்பட்டது. இதனை பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் திறந்து வைக்க வேண்டும் என நினைத்த நேரு, அணை கட்டும் பணியில் ஈடுபட்ட 16 வயது சந்தால் பழங்குடியின பெண்ணான பத்னி மஞ்சியாயின் என்பவரை வைத்து அணையை திறந்து வைத்தார்.

அவரை பாராட்டும் விதமாக நேரு, பத்னிக்கு மலர் மாலை ஒன்றை அணிவித்துள்ளார். மலர் மாலை அணிவித்ததால், சந்தால் பழங்குடியின வழக்கப்படி நேரு – பத்னிக்கு திருமணம் நடைபெற்றதாக அந்த இனத்தை சேர்ந்தவர்கள் கருதினர். பழங்குடி அல்லாத ஒருவரை திருமணம் செய்ததற்காக பத்னியை, சந்தால் பழங்குடியினர் புறக்கணித்தனர். அவர்களது கிராமத்திற்குள் நுழையவும் தடை விதித்தனர்.

இதையடுத்து, பத்னி அங்கிருந்து வெளியேறி பஞ்செட் பகுதியில் வசித்து வந்தார். அங்கு அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்று, குழந்தைகளும் பிறந்தது. நாட்டின் முதல் பிரதமரான நேருவின் முதல் பழங்குடியின மனைவி என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட பத்னி பற்றி அறிந்த ராஜீவ், பிரதமராக இருந்தபோது 1985இல் மேற்குவங்கம் மாநிலம் அசன்சோலுக்கு சென்ற போது, அங்குள்ள காங்கிரஸ் தலைவர் மூலமாக பத்னியை சந்தித்தார்.

முன்பு நடந்த துயரத்தை எடுத்துக் கூறிய பத்னிக்கு, தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் (டி.வி.சி) பணி வழங்க ராஜீவ் உத்தரவிட்டார். அதில் பணியாற்றிய பத்னி, 2005ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில், கடந்த நவம்பர் 17ஆம் தேதி அவரது மகள் ரத்னாவின் வீட்டில் தனது 80-வது வயதில் காலமானார்.

Chella

Next Post

தமிழக மக்களே உஷார்..!! மீண்டும் மிக கனமழை எச்சரிக்கை..!! மாவட்டங்களின் லிஸ்ட் இதோ..!!

Tue Nov 21 , 2023
தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு – மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் […]

You May Like