திருநெல்வேலி மாவட்டம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் முதல்வரின் நிவாரண நிதிக்காக பிச்சை எடுத்து தற்போது 10 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்.
மேலும் 2010-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை யாசகத்தில் , தனக்கு கிடைக்கும் அனைத்து பணத்தையும் கொண்டு அரசு பள்ளிகளுக்கு நாற்காலி, மேஜை, தண்ணீர் வழங்கும் இயந்திரம் போன்ற பல உபயோக பொருட்களை வழங்கி உள்ளார்.
அதனை தொடர்ந்து, கொரோனா காலத்தில் இருந்து யாசகம் பெற்று அதில் கிடைத்த தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்கி வருகிறார். அந்த நிதிக்கு இதுவரை 51 லட்ச ரூபாயை பல கட்டங்களாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தான் யாசகம் பெற்று வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்தை எடுத்து கொண்டு, முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக அங்குள்ள சிவகங்கை மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அச்சமயத்தில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பணி நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டதால், வங்கி காசோலை எடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளார்.