நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் காணவில்லை என கூறப்பட்டுள்ளதால் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அச்சாம் மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேரை தேடும் பணியில் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தின் தார்ச்சுலா மாவட்டத்தில் ஏற்கனவே ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 11 பேர் மாயமானார்கள். அவர்களையும் ராணுவ குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் மழையால் அவ்வப்போது மீட்புபணிகள் பாதிக்கப்படுகின்றது. மகாகளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மற்றும் இரண்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றது. காயமடைந்த நிலையில் 7 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது . மேலும் பலர் காணவில்லை எனவும் அடுத்தடுத்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.