fbpx

கருப்பை கோளாறை நீக்கும் நெருஞ்சி!… ஆண்மையை பெருக்குவதாக ஆய்வில் தகவல்!…

ஆயுர்வேத மருத்துவங்களில் ஒன்றான நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகையாக விளங்கிவருகிறது
.

நெருஞ்சி முள்ளில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்ற.நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவர். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும்.


நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவை நெருஞ்சில் விதைகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நெருஞ்சியில் இருக்கும் வேதிபொருளான செர்டொலி ஆனது செல்களை தூண்டி விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதாக ஆய்வுகள் கூறுகிறது

.அரிசியுடன் இந்த செடியை கலந்து வேகவைத்து அதனுடன் நாட்டுசர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் பாதையில் இருக்கும் பிரச்சனைகள் சரியாகும். சிறுநீர் எரிச்சல் குணமாகும். வெள்ளைப்படுதல் தீவிரமாக இருக்கும் பெண்களுக்கு இவை நல் மருந்தாக இருக்கும். மேலும் சிறுநீரக கல்லை உடைத்து வெளியேற்றும் தன்மை நெருஞ்சிக்கு உண்டு. கண் எரிச்சல் குணமடையும் உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும். அவர்கள் நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.

மேலும் இது குளிர்ச்சி உண்டாக்கி , சிறுநீர் பெருக்கி , உரமாக்கி , உள்ளழலகதறி , ஆண்மைப்பெருக்கி, நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இவ்வுப்புகள் சில வேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும். நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் .

நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.

Kokila

Next Post

செல்போனை தலையணைக்கு கீழ் வைத்து தூங்காதீர்கள்!... புற்றுநோயை உருவாக்கும்!... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Sat Feb 18 , 2023
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மற்றும் மின்னணு சாதனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அவை புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் என அனைவரிடமும் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரியாமல், குழந்தைகள் அதிகளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர். பகல் நேரங்களில் எவ்வளவு தான் போன்களை பார்த்துக்கொண்டிருந்தாலும், இரவு தூங்குவதற்கு முன்பு வரை […]

You May Like